Sunday, November 19, 2006

ஞானியின் சன்னிதியில்

ஞானியின் சன்னிதியில் ...
சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களுடன் உரையாடல்
தமிழாக்கம் ---- மரபின் மைந்தன் ம.முத்தையா
படித்த காலம் - 2006 அக்டோபர் 30 - 2006 நவம்பர் 10
உள்ளடக்கம் -- ஏழு தலைப்புகளில் கருத்தாழம் உள்ள பேச்சு.
1. அருள்
-மனம் -- சேகரிக்கும் தன்மை கொண்டது
---------- சமுதாயத்தின் குப்பைத் தொட்டி

2. திரை விலகுகிறது
-அலெக்சாண்டர் ஒரு முட்டாள்.
-"நான் மாறத் தயாராக இருக்கிறேன்" - இந்த உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால் பிறகு எல்லாமே மாறும்.

3. அக விடுதலை
-ஆணும் பெண்ணும் சமம்.
-உங்கள் சிந்தனையை குழந்தைகளின் மீது திணிக்காதீர்.
-கடவுள் உண்டு அல்லது இல்லை என்று நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவற்றால் எந்த பயனும் இல்லை. எனக்குத் தெரியாது என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால்தான் ஒரு தேடுதல் உங்களுக்குள் துவங்கும்.
-பணம் படைத்த கலாச்சாரத்தின் மேம்போக்கான வாழ்க்கைமுறையைப் பின்பற்றினால், இந்தியக் கலாச்சாரத்தின் சூட்சுமமான தன்மைகளை இழந்து வருந்த நேரிடும்.

4. மதங்களும் நல்லிணக்கமும்
-உள்நிலை அனுபவத்தை ஒரு நம்பிக்கையாக அணுகாமல் ஒரு அறிவியலாக தொடங்குங்கள்.
-இந்த உலகுக்கு நீங்கள் செய்யப்போகும் மிகப்பெரிய நன்மையே ஒரு ஆனந்தமான மனிதராக இருப்பதுதான்.

5. வழி
-உயிர்கள் ஒவ்வொன்றும் தெய்வீகத்திற்கான விதை.
-ஆன்மீகத்தை நீங்கள் செய்யமுடியாது. இது ஏற்பட அனுமதிக்க வேண்டும்.
-உடல், மனம், உணர்ச்சி, சக்திநிலை தாண்டி விரிவடையுங்கள்.
-கல்வி என்பது கரைந்து போவதற்கான ஒரு வழி.

6. குருவின் திருவடியில்
-3 மாத தீவிர முழுமைப்பயிற்சி
-முழுமையான மனிதர் யார்?
--உறுதியானவரா?
--தெளிந்த மனம் - சிந்தனை வாய்த்தவரா?
--அமைதி கண்டவரா?
--தனக்குள் மகிழ்ச்சியை அனுபவிப்பவரா?
--தளைகளில் இருந்து விடுதலையானவரா?

7. கவிதை

மொத்தத்தில் நூல் அருமையாக இருந்தது. ஏற்கனவே வேதாத்திரி, மகரிஷி மற்றும் விவேகானந்தர் போன்றோரைப் படித்திருப்பதால் புரிதல் நன்றாக அமைந்தது. எனக்குள் நல்ல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த பாதிப்பே இதை எழுதத்தூண்டியது.

நல்ல ஆன்மீகப் பெரியோர்கள் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது மகிழ்ச்சியான ஒன்று.
அனைவரின் கருத்துகளையும் நமதாக்கிக் கொண்டு உயர்வோம்.

வாழ்க வளமுடன்.